தமிழகம்

குவிக்கப்படும் போலீசார்! தமிழகம் முழுவதும் உஷார்நிலை. என்ன விஷயம் தெரியுமா?

Summary:

Full police protection in tamilnadu for upcoming festivals

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்னும் ஓரிரு வாரங்களில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி திருவிழா வருவதை ஒட்டி தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மண்டல ஐஜி கள் மற்றும் மாவட்ட எஸ்பி களுக்கு டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான தூதரகங்கள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement