பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
அடேங்கப்பா௧ இப்படியொரு பரிசா! திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த அசத்தலான அன்பளிப்பு! களைகட்டிய கல்யாண வீடு!
அடேங்கப்பா௧ இப்படியொரு பரிசா! திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த அசத்தலான அன்பளிப்பு! களைகட்டிய கல்யாண வீடு!

சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சநிலையில் உயர்ந்தபடி இருக்கிறது. மேலும் வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் பெருமளவில் அல்லோலப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் சிறுவணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல உணவகங்களும் மாபெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பலஇடங்களில் மர்மநபர்கள் சிலர் வெங்காய மூட்டைகளை திருடியும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் சமீபத்தில் சப்ரீனா மற்றும் ஷாகுல் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது திருமண மேடையில் ஷாகுலின் நண்பர்கள் அனைவரும் புதுமண தம்பதிகளுக்கு முழுவதும் வெங்காயத்தால் செய்யப்பட்ட பொக்கே ஒன்றை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
இதானால் திருமண வீடே கலகலப்பாக்கியுள்ளது. மேலும் அவர்கள் போல செய்ய பயன்படுத்திய வெங்காயத்தின் மதிப்பு 600 ரூபாயாம். இந்நிலையில் அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.