அரசியல் தமிழகம்

வந்த உடனே பெண்களின் வரவேற்பை பெற்ற ஸ்டாலின்!! நாளை முதல் பெண்களுக்கு இலவசம்!! முக்கிய கோப்புகள் கையெழுத்தானது!!

Summary:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் தான் பதவிற்றே முதல் நாளே பல முக்கிய திட்ட

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் தான் பதவிற்றே முதல் நாளே பல முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்குவந்தால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்டும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி அமைகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று காலை பதவியேற்று தனது பணியை தொடங்கியுள்ளார்.

முதல்வர் பதவியேற்றதும் தலைமை செயலகத்திற்கு வந்த ஸ்டாலின், பல்வேறு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ3 குறைப்பு, நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்க ஏற்பட்டு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்ற கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.


Advertisement