"மத்திய அரசு வேலை வேணுமா..." 57 லட்ச ரூபாய் மோசடி... ஒருவர் கைது... மற்றவர்களுக்கு வலைவீச்சு.!fraud-of-57-lakh-rupees-by-claiming-to-get-a-job-in-the

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி   57 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரசல் ராஜ்(49),  கன்னியாகுமரி புதுக்கடை பகுதியைச் சேர்ந்த  ஜெயன் பிரபு என்பவர் ரசல் ராஜிடம் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். இவர் கூறியதை உண்மை என்று நம்பிய ரசல் ராஜ் தன்னுடைய நண்பர்களான டெய்சி செல்லதுரை,எபிரேம், அருண்குமார் ஆகியோரையும் ஜெயம் பிரபுவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

tamilnadu

 

இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரிடமிருந்தும் 57 லட்ச ரூபாய் வரை வேலை வாங்கி தருவதற்கு கமிஷனாக பெற்று இருக்கிறார். அதன் பிறகு எபிரேம்  என்பவருக்கு கான்பூர் ரயில்வே இல் வேலையும்  டேய்சி செல்லதுரை மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலையும் கிடைத்திருப்பதாக போலியான ஆவணங்களை தயாரித்து அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

tamilnadu

மேலும் அவர்கள் சில இடங்களில் பணிக்கு சென்ற பின்னர் அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இவரைப் பற்றி விசாரித்த போது  போலியான அரசு வேலை ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி இருப்பது  தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஜெயன் பிரபுவிற்கு எதிராக  கன்னியாகுமரி காவல்துறை ஆணையரிடம்  புகார் பதிவு  செய்தனர்  இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிரடியாக  ஜெயன்  பிரபுவை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயன் சகோதரி .ரதி மீனா (26), தாய் ரத்தினபாய், சென்னை சாய் பிரசாத்  ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறது.