சபதத்தை முடித்த திரௌபதி?... திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!Former EX Minister Ponmudi Constituency now Closed 

 

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சமீபத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதனால் அவரின் அமைச்சர் பதவி, அதனைதொடர்ந்த எம்.எல்.ஏ பொறுப்பு ஆகிய பதவிகள் அடுத்தடுத்து இழக்கப்பட்டன. இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதியின் எம்.எல்.ஏ பொன்முடி பதவியை இழந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த திரௌபதி கோவில் ஒன்று மூடப்பட்ட விவகாரத்தில் பொன்முடிக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஒருதரப்பினர் ஆதங்கம் தெரிவித்து திரௌபதி பதில் சொல்வர் என கூறி வந்தனர். 

இந்நிலையில் தான் பொன்முடிக்கு எதிராக வழக்கு விசாரணை திசைதிருப்பி, அவர் எம்.எல்.ஏ பதவி வரை இழந்து இருக்கிறார். இது திரௌபதி சபதத்தை நிறைவேற்றியதால் மட்டுமே என அத்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளபதிவுகளின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.