விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
கைலாஸாவிலும் கசமுசா?.! கைலாஸாவில் சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நித்தி - பெண் பரபரப்பு புகார்.!!
தலைமறைவு வாழ்க்கையில் உலகையே திரும்பி பார்க்க வைத்த போலி சாமியார் நித்தியானந்தா கைலாஸாவில் வாழும் சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம், பீடதி நகரில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. நித்தியானந்தா தற்போது எங்கு உள்ளது என்பது தெரியாத கைலாஸா மர்ம தேசத்தில் தலைமறைவாகி, அங்கிருந்து பக்தர்களுக்கு இணையவழியில் வீடியோ பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், பீடதி காவல் துறையினருக்கு வெளிநாட்டு பெண் நித்தியானந்தாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளார். வெளிநாட்டை சேர்ந்த பெண்மணி சார்க் லாண்ட்ரி என்பவர், இ-மெயில் மூலமாக இந்த புகாரை அனுப்பி இருக்கிறார்.
அந்த புகாரில், கைலாஸா நாட்டில் வசித்து வரும் நித்தியானந்தா, அங்குள்ள சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் புகார் வழியாக விபரத்தை பதிவு செய்ததால், அதுகுறித்து அதிகாரிகள் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவிற்கு வந்து ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் காவல் துறையினர் தரப்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே நித்தியானந்தாவை கைது செய்ய சர்வதேச அளவில் Red மற்றும் Yellow சம்மன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.