பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம்... பணம் நகை பறிப்பு... கடைசியில் கழட்டி விட்ட காதலன்...!!

பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம்... பணம் நகை பறிப்பு... கடைசியில் கழட்டி விட்ட காதலன்...!!Flirting by saying words of desire to the girl... Extortion of money and jewelry... At last the lover who has taken off her..

திருவாரூர் மாவட்டம் அடியாத்தமங்கலம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். ராஜேந்திரன் திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் திருவனாதபுரம் பகுதியில் வசித்து வரும் சாமிநாதன் மகள் சங்கீதாவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகியுள்ளனர். மேலும் ராஜேஷ் சங்கீதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி உள்ளார். இந்த நிலையில் திடீரென்று சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் ராஜேஷ். அதுமட்டுமின்றி வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் சங்கீதாவின் வீட்டார் முறையிட்டனர். அப்போது ராஜேஷின் தந்தை ராஜேஷிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சங்கீதா திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவதாக கூறி, அவரும் ராஜேஷும் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் மன உளைச்சலில் இருந்து வந்த சங்கீதா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பாக சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். 

அதில், என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணுடன் ராஜேஷ் பழகி வருவதாகவும், தன்னிடமிருந்து, ஒரு பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணமும் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ராஜேஷ் மீது சீடிங் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் ராஜேஷ் தீவிரமாக தேடி வருகின்றனர்.