அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"கும்பாபிஷேக விழாவில் சோகம்..." 5 வயது குழந்தை தலை நசுங்கி பலி.!!
திருச்சி மாவட்டத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த 5 வயது குழந்தை விபத்தில் தலை நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள மாமரத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பட்டாயி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் பைரவி என்ற 5 வயது சிறுமியும் தனது குடும்பத்தாருடன் கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருக்கிறது.

கும்பாபிஷேக விழாவிற்கு வந்த குழந்தை காலை கடன் கழிப்பதற்காக சாலையோரம் உள்ள முட்புதரில் அமர்ந்துள்ளது. அப்போது தொட்டியத்திலுள்ள புதிய மரியன்னை பள்ளியைச் சேர்ந்த வேன் குழந்தை மீது மோதியதில் குழந்தையின் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த தகராறு... வெட்டி சாயக்கப்பட்ட கட்டிட தொழிலாளி.!! தந்தை, மகன்கள் கைது.!!
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 5 வயது குழந்தை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!