திருவேற்காட்டில் திடீரென செத்து மிதக்கும் 4 டன் மீன்கள்! நகராட்சி அதிகாரிகள் ஆய்வு!!fishes-died-in-thiruverkadu-kovam-river

சென்னை திருவேற்காட்டை அடுத்த காடுவெட்டி அருகே கூவமாறு உள்ளது. இதில் திடீரென்று 4 டன் மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கூவத்தில் நச்சு கலந்த நீர் ஏதாவது கலக்கப்பட்டுள்ளதா? அல்லது கழிவு நீர்கள் கலக்கப்படுவதே இதற்குக் காரணமா? என்று ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் கூவத்தின் தண்ணீர் மாதிரியே எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.