தமிழகம்

மூக்கு வலியால் கதறிதுடித்த சிறுவன்! உயிருடன் மூக்கில் இருந்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Summary:

fish in boy nose

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் அருள்குமார். இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருந்த கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.

 அப்பொழுது அருள்குமாரின் மூக்கில் ஏதோ ஒன்று நுழைவது போல இருந்துள்ளது. மேலும் அதனை தொடர்ந்து அருள்குமாருக்கு மூக்கில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலியால் துடிதுடித்த அந்த சிறுவனை மீட்டு அவரது நண்பர்கள் உடனடியாக அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து மருத்துவர்கள் அந்த சிறுவனின் மூக்கை பரிசோதனை செய்தபோது உயிருடன் ஜிலேபி மீன் ஒன்று சிக்கிக்கொண்டு இருந்ததை கண்டனர்.அதனை தொடர்ந்த அவர்கள் தீவிர முயற்சிக்கு பின் அந்த மீனை மூக்கிலிருந்து வெளியே எடுத்தனர். 

அதனை தொடர்ந்து குளத்தில் குளிக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறலாம். மேலும் இதனால் ஆபத்தும் ஏற்படலாம் எனவே கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement