காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்..!! 5 நாட்களாக பரவும் 'தீ' கட்டுக்குள் வருமா..?!!

காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்..!! 5 நாட்களாக பரவும் 'தீ' கட்டுக்குள் வருமா..?!!



'Fire' spread for 5 days be brought under control by an army helicopter to extinguish the forest fire?

கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டில் கடந்த 11 ஆம் தீ விபத்து ஏற்பட்டது. கோடை காலமாக இருப்பதால் மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உடுமலை, பொள்ளாச்சி ஆனைமலை, ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள வனச்சரக பணியாளர்கள்  சுமார் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை காட்டில்  உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. மூங்கில் மரங்கள் எளிதில் தீபற்றி எரிந்துள்ளன. இந்த காட்டுத் தீயினால், விலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் பணி இன்று காலை தொடங்கும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.