"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
சென்னை தி.நகரில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!
சென்னை தி.நகரில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தி.நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 5 மாடி கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதர்க்குள் 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகியதாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டுள்ள இந்த அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
காலை நேரத்தில் ஊழியர்கள் அலுவலகத்தை திறப்பதற்கு முன்பே தீ விபத்து ஏற்பட்டதால் உள்ளே எந்த ஊழியரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.