தமிழகம் சினிமா

விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல்! ட்விட்டரில் துவங்கிய பிரச்சனை கத்தி குத்தில் முடிந்தது

Summary:

Fight between vijay and ajith fans

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ரசிகர்கள் மாறி மாறி விஜய் மற்றும் அஜித்தை தரக் குறைவாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 

சமீபத்தில் கூட #RIPVIjay என்ற ஹேஷ்டேகை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, #LongLiveVijay என்ற ஹேஷ்டேகை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பல பிரபலங்கள் இரு ரசிகர்களுக்கும் அறிவுரை கூறினர். 

ஆனால் சமூக வலைத்தளங்களில் மட்டுமே ட்ரெண்டிங் ஆன இந்த கருத்து தகராறு சென்னை புழல் பகுதியில் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. இலங்கை தமிழர்கள் வசித்துவரும் குடியிருப்பில் உமாசங்கர்(32 வயது), ரோஷன்(34 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தவறாக பேசிறுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த ரோஷன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து உமாசங்கரின் தலை, கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த உமாசங்கரின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலை மேலும் கஸலைக்கிடமாகவே, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு உமாசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இதனைத் தொடர்ந்து ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Advertisement