தமிழகம்

தேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார்! பதறிப்போன சக பாதிரியார்கள்!

Summary:

father suicide in church


சென்னை வியாசர்பாடியில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் தங்கியிருந்த பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ட்டின் சவரியப்பன் (37) என்பவர் பாதிரியராக இருந்துவந்துள்ளார். மேலும் இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு தேவாலயத்தில் வழக்கம்போல் பிரார்த்தனை முடிந்து, அனைவரும் சென்ற பிறகு தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் மார்ட்டின் தூங்கச்சென்றார். இதனையடுத்து நேற்று காலை நீண்டநேரமாகியும் மார்ட்டின் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த மற்ற பாதிரியார்கள் மார்டினின் அறைக்கு சென்று பார்த்தனர்.

நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள மின் விசிறியில் மார்டின் சடலமாக இருந்தார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மார்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு வாரமாகவே மனச்சோர்வுடன் இருந்த மார்ட்டின் எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என தெரியவில்லை எனவும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


 


Advertisement