
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்து ராயம்பேட்டை என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தவர்தான் முருகன் (வயது 38). முருகனுக்கு திருமணம் முடிந்து தேவிகா (27) என்ற மனைவியும், மீனா (10), ஷிவானி (8) என இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர்.
முருகன் நெசவு தொழில் செய்துவரும்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தேவிகா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த நான்கு ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தநிலையில் தேவிகா அந்த வேலையை விட்டு விட்டு கீழ்பென்னாத்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கடந்த 15 நாட்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ஆனால் இந்த வேலைக்கும் செல்ல கூடாது என முருகன் தேவிகாவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு மகள்களையும் தலையில் கடுமையாக தாக்கியதோடு மனைவி தேவிகாவையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் 8 வயது குழந்தைக ஷிவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீனா மற்றும் தேவிகா இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் 10 வயது குழந்தை மீனவவும் உயிரிழந்துவிட்டார்.
தற்போது தேவிகா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement