தனது மூன்று பிள்ளைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற பெண்! வீடு திரும்பியபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

தனது மூன்று பிள்ளைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற பெண்! வீடு திரும்பியபோது காத்திருந்த பேரதிர்ச்சி!


father-killed-3-children-for-family-issue

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கோவிந்தம்மாள்.  இவர்களுக்கு ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். மேலும் ஆறுமுகம், கோவிந்தம்மாள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வழக்கம்போல ஆறுமுகம் மற்றும் கோவிந்தம்மாளுக்கு இடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோவிந்தம்மாள் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் மாலை வீடுவந்து பார்த்தபோது மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட கோவிந்தம்மாள் கதறி துடித்துள்ளார். 

 

father

இந்நிலையில் தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகம் மற்றும் மற்ற 2 குழந்தைகளை தீவிரமாக தேடியுள்ளனர். அப்பொழுது ஆறுமுகம் ஊருக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். மேலும் அருகே இருந்த கிணற்றில் குழந்தைகள் ஷாலினி, சேதுராமன் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆறுமுகம் மற்றும் 3 சிறுவர்களின்  உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்கள் மற்றும் மகனை கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.