கத்தினாள்!வெட்டினேன்! மருமகளை கோடாரியால் துண்டுதுண்டாக வெட்டிக்கொன்ற மாமனார்! வெளியான பகீர் வாக்குமூலம்!!

கத்தினாள்!வெட்டினேன்! மருமகளை கோடாரியால் துண்டுதுண்டாக வெட்டிக்கொன்ற மாமனார்! வெளியான பகீர் வாக்குமூலம்!!


father in law killed son wife

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தில் வசித்து வருபவர் அறிவழகன். இவர் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அறிவழகன் தனது தோட்டத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் அறிவழகனின் தந்தை பழனி மற்றும் தாயார் தொட்டம்மாள். அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அறிவழகனின் தந்தை பழனி காவல் நிலையத்திற்கு சென்று தனது மருமகள் அமுதாவை வெட்டி கொலை செய்து விட்டேன் என சரணடைந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அமுதாவின் உடற்பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

 மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அமுதா திருமணமாகி வந்ததிலிருந்து அவர் மீது எனக்கு ஆசை இருந்தது. இதுகுறித்து அவரிடம் தெரிவித்ததற்கு அமுதா மறுப்பு தெரிவித்தார். ஆனால்  இதற்கிடையில் அமுதா அதே ஊரில் மற்றொரு நண்பருடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அமுதா தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு அவரை கட்டிப்பிடித்தேன்.உடனே அவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த நான் அருகிலிருந்த கோடாரியால் அவரை சரமாரியாக வெட்டி விட்டேன் என்று கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து  போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.