சினிமா

திரௌபதி படம் எப்படி இருக்கு? கருத்துக்களை பதிவிட்டுவரும் ரசிகர்கள்! களைகட்டும் திரையரங்குகள்!

Summary:

Fans talk about thravubathi movie

வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இந்த படத்தில் நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திரெளபதி படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகி பல சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் திரெளபதி பட ட்ரைலருக்கு அதிக அளவில் ஆதரவும் வந்தது. இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் இன்று வெளியாகி பல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் முதல் கட்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் திரௌபதி படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் கூறுகையில், பிரபல நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம், ஆடியோ வெளியிட பெரிய மேடை கிடையாது, தயாரிப்பாளர்கள் இல்லாமல் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம். ஆனாலும் இன்று தமிழகம் முழுவதும் பேச்சு பொருளாக மாறியுள்ளது திரெளபதி படம் என கூறியுள்ளனர்.

இப்படத்தை பார்த்தவர்கள் திரெளபதி படம் உண்மைக் கதை, சவாலான காட்சிகள் படங்களில் இடம் பெற்றுள்ளது,   இயல்பான வசனங்கள் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியில் படத்தில் நல்ல கருத்து உள்ளது. குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்க்கவேண்டிய குடும்ப படம் என பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement