யாரு செஞ்ச புண்ணியமோ..!! திடீரென தீப்பற்றி எரிந்த கார்...!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..

யாரு செஞ்ச புண்ணியமோ..!! திடீரென தீப்பற்றி எரிந்த கார்...!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..


family-members-luckily-escaped-from-car-fire

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் சுரேஷ்குமார் (43) என்பவர் தனது மனைவி, மாமனார், மாமியார், 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் செவர்லெட் காரில் கோவையில் இருந்து திருச்சிக்கு சுற்றுலா வந்துள்ளார். திருச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் பின்னர் தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்சி - தஞ்சாவூர் சாலையில் மதியம் 2 மணியளவில் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்த அவர்கள், காரில் இருந்து திடீரெனெ புகை வருவதை பார்த்துள்ளனர். உடனே காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் காரில் இருந்து வேகமாக கீழே இறங்கியநிலையில் கார் உடனே தீ பற்றி எரிய தொடங்கியது.

அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆயினும், கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.