இந்தியா

மனமே இல்லாமல், 6 வயது மகளுக்காக இந்திய நாட்டை விட்டு வெளியேறும் தம்பதியினர்! வெளியான பரிதாப காரணம்!!

Summary:

family member leaving from country for air pollution

டெல்லி அருகே நொய்டாவில் வசித்து வருபவர்கள் மனோஜ் ஒஜா மற்றும் துலிகா. இவர்களுக்கு 6 வயதில் பரிதி என்ற பெண் குழந்தை உள்ளது. கை நிறைய சம்பளம் வாங்கும் அவர்கள் சொந்தவீடு,  உறவினர்கள் என அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் அவர்கள் தற்போது டெல்லியில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக நாட்டை விட்டு வெளியேறவே முடிவு செய்துள்ளனர்.  

சிறுமி பரிதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளியின் போது சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர் இருமல், மூச்சு விட கடினம் கஷ்டம் என பல அவதிகளை சந்தித்து வந்துள்ளார். மேலும் அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவரது சுவாச நிலை மோசமடைந்து உள்ளதாகவும்,  இவ்வாறு தொடர்ந்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பரிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த இடத்தை விட்டு வெளியேறினால்தான் குழந்தையின் பிரச்சினை சரியாகும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதை தொடர்ந்து அவர்கள் தற்போது காற்று மாசுபாடு முற்றிலும் இல்லாத இடத்திற்கு செல்ல முடிவு செய்து கனடா செல்ல முடிவெடுத்துள்ளனர். காற்று மாசுபாடு காரணமாக மனமே இல்லாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளது சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement