தாலியை கழட்டி கணவன் முன் வீசி எறிந்த மனைவி.. அவமானம் தாங்காமல் கணவன் செய்த காரியம்.. 1 மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..Family fight husband commit suicide after one month of marriage

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியை கழட்டி வீச, தாங்கிக்கொள்ள முடியாத கணவன் தூக்கில் தொடங்கிய சோகம் சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு. 22 வயதாகும் விஷ்ணு குறும்படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஈரோட்டை சேர்ந்த ஷாலினி(20) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

முதல் நட்பாக பழகிவந்த இவர்கள் பின் காதலர்களாக மாறியநிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியுள்ளது. நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுவது, கணவரின் குடும்பத்தினர் தன்னை விமர்சிப்பது என அடுக்கடுக்காக காரணம் கூறி கணவருடன் சண்டை போட்டுவந்துள்ளார் ஷாலினி.

இப்படியே போய்க்கொண்டிருந்தநிலையில் வழக்கம்போல் இருவருக்கும் கடந்த திங்கட்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆந்திரம் அடைந்த ஷாலினி தனது கழுத்தில் இருந்த தாலியை கழட்டி வீசியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத விஷ்ணு ஆத்திரத்தில் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷாலினி கதவை திறக்க முயன்றும் முடியாமல் போக, உதவிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஷ்ணு தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

தன்னால் தனது காதல் கணவன் தற்கொலை செய்துகொண்டதை தாங்கிக்கொள்ளமுடியாத ஷாலினி அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர். திருமணம் முடிந்து 1 மாதத்தில் கணவன் மனைவி சண்டையால் கணவன் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.