துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
தனது பேஸ்புக் நண்பனை காண ஆசையாக சென்ற பத்தாம் வகுப்பு மாணவி.! துடிதுடிக்க அரங்கேறிய பெரும் விபரீதம்!
தனது பேஸ்புக் நண்பனை காண ஆசையாக சென்ற பத்தாம் வகுப்பு மாணவி.! துடிதுடிக்க அரங்கேறிய பெரும் விபரீதம்!

தெலுங்கானா மகபூப் நகரில் வசித்து வருபவர் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி. இவருக்கு நவீன் ரெட்டி என்ற வாலிபருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் நட்புடன் பேசி பழகி வந்த நிலையில், ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர் அதனை தொடர்ந்து இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெகபூப் நகரின் சங்கராய பள்ளி குடியிருப்புக்கு அருகிலிருந்த பாழடைந்த பகுதியில் தனியாக சந்தித்துள்ளனர்.
அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நவீன் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். மேலும் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வலுக்கட்டாயமாக அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த நவீன் ஆத்திரம் அடைந்து அவரை கீழே தள்ளியுள்ளார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த சிறுமியின் தலை கல்லில் பயங்கரமாக அடிபட்டுள்ளத. இந்நிலையில் அதிகளவு ரத்தம் வெளியேறிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அவர் நவீன் உடன் சென்றதை கண்டறிந்துள்ளனர். பின்னர் நவீனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவீனின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.