வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
கன்னக்குழி அழகுடன் குழந்தை பிறக்க வேண்டுமா; அப்ப கண்டிப்பா இதை செய்யுங்க.!
பொதுவாக ஒருவரின் முகத்தில் கன்னக்குழி இருந்தால் அவர் மற்றவரோடு பேசும் போதும் சிரிக்கும் போதும் கன்னக்குழி அழகு பார்ப்பதற்கு எடுப்பாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். ஆனால் இந்த அழகு என்பது இயற்கையிலேயே அமைந்த ஒன்றாகும்.
இன்று சினிமா துறையில் மிகவும் பிரபலமாக உள்ள தீபிகா படுகோனே, அலியா பட் போன்ற நடிகைகளின் மார்க்கெட் இந்த அளவிற்கு உயர இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். மொத்தத்தில் இதை பின்பற்றி உச்சத்தில் உயந்தவர்கள் ஏராளம்.
சமீபத்தில் இந்த கன்னக்குழி அழகால் மிகப்பெரிய ரசிகர் வரவேற்பை பெற்றவர் சிருஷ்டி டாங்கே. அவர் நன்றாகா நடிக்கிறாரோ இல்லையோ அவரின் அழகிய கன்னக்குழி முகம் அனைவரையும் மயக்கி விடும்.
இது ஒரு மரபியல் ரீதியாக தொடர்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை 100% கன்னக்குழியுடன் தான் பிறக்குமாம்.
கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், சாதாரண முகம் உள்ள பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளதாம்.
அதே போல் கன்னக்குழி உள்ள ஒரு பெண்ணும், சாதாரண முகம் உள்ள ஆணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளதாம்.