புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை.. "நல்ல செய்தி" - செல்வப்பெருந்தகை தகவல்.!
மருத்துவமனையில் அனுமதியான காங். மூத்த தலைவர் இளங்கோவனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், எம்.எல்.ஏவான மகனின் இறப்புகுப்பின்னர், மீண்டும் அரசியலில் களமிறங்கினார்.
தற்போது 75 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசுப்பணிகள் மற்றும் மக்கள்பணிகளை கவனித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் மூச்சுத்திணறல் உட்பட உடல்நலக்குறைவை எதிர்கொண்டவர், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்ய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking : நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியில் இருந்து விலகல்.!
நல்ல செய்தி சொல்லியுள்ளனர்
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்கு உடல்நலம் தேறி வருகிறார். மகிழ்ச்சியான செய்தியை மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
விரைவில் அவர் வீடுதிரும்புவார். அதனை எதிர்பார்த்து காங்கிரஸ் பேரியக்கம் காத்திருக்கிறது. அவர் சாதாரண நிலையை அடைய மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கிறார்கள்" என தெரிவித்தார். இதன் வாயிலாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர்: பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரம்.. பெற்றோர்-மகன் கொலை வழக்கில் கண்ணீர் சோகம்.!