தின்பண்டம் வாங்க சென்ற மகள்.. அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்திய தாய்.. பரபரப்பு சம்பவம்.!

தின்பண்டம் வாங்க சென்ற மகள்.. அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்திய தாய்.. பரபரப்பு சம்பவம்.!



erode-railway-station-mother-stops-train-using-emergenc

மகள் வருவதற்குள் இரயில் புறப்பட்டுவிட, தாய் இரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இரயிலை நிறுத்திய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலையில் பயணிகள் இரயில் புரட்டு சென்றுகொண்டு இருந்தது. இரயில் காலை 08:30 மணியளவில் ஈரோடு இரயில் நிலையத்தை சென்றடைந்த நிலையில், முதல் நடைமேடையில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர், 08:50 க்கு இரயில் புறப்பட்டு நகரத்தொடங்கியது.

அப்போது, இரயில் திடீரென நின்ற நிலையில், பணியில் இருந்த அதிகாரிகள் இரயில் பெட்டியை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அந்த சமயத்தில் பெண்ணொருவர் இரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியது உறுதியானது. மேலும், இரயில்வே அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை செய்தனர். 

erode

அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்மணி கூறுகையில், "நானும், எனது மகளும் இரயில் பயணம் செய்கிறோம். மகள் தின்பண்டம் வாங்க இறங்கி சென்றவர் வர தாமதமாகிவிட்டது. இரயில் புறப்பட்ட நிலயில், அவர் ஓடிவந்ததை கவனித்து இரயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, பெண்மணியின் முகவரி மற்றும் அலைபேசி எண் தொடர்பான தகவலை வாங்கி வைத்துக்கொண்ட அதிகாரிகள், பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.