போட்டோவ ஆபாசமாக வெளியிட்டுருவன்., காசு கொடு.. காமுகன் கைது..! ஈரோட்டில் பரபரப்பு..!!

போட்டோவ ஆபாசமாக வெளியிட்டுருவன்., காசு கொடு.. காமுகன் கைது..! ஈரோட்டில் பரபரப்பு..!!


erode-man-threats-a-girl

இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 42). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரும், அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் ஒருவரும் அந்தியூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளனர்.

மேலும், புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறவே, இளம்பெண்ணின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

erode

இந்த புகாரை ஏற்ற போலீசார், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட தர்மலிங்கம் கொடுத்த தகவலின் பெயரில் அவரது நண்பர் சரண்குமார் என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.