செய்வினை வைத்ததாக 88 வயது மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; 45 வயதாகியும் திருமணமாகாத விரக்தியில் வெறிச்செயல்..!

செய்வினை வைத்ததாக 88 வயது மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; 45 வயதாகியும் திருமணமாகாத விரக்தியில் வெறிச்செயல்..!


Erode Gobichettipalayam Man Kills Aged Woman

45 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தால், பக்கத்து வீட்டில் வசித்து வரும் மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 88). இவரின் மகன் சுகுமார் (வயது 70), மகள் ராதா (வயது 68). இவர்களில் சுகுமார் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். 

ராதா கோபிச்செட்டிபாளையத்தில் வசித்து வரும் நிலையில், சரஸ்வதியின் கணவர் இறந்துவிட்டதால் அவர் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் வழக்கம்போல சரஸ்வதி வாசலில் கோலமிட சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த மர்ம நபர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டனர். 

பின்னர், கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவே, அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

erode

விசாரணையில், சரஸ்வதியை கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்து வரும் பாலுசாமி (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, நடந்த விசாரணையில் பகீர் தகவல் வெளியானது. அதாவது, சரஸ்வதி கோவில் கட்டி பஜனை & வழிபாடு செய்து வருகிறார். இவர் செய்வினை வைத்ததால் 45 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பாலுசாமி இருந்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் வன்மம் போன்றவை சரஸ்வதியை கொலை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சம்பவத்தன்று சரஸ்வதி காலையில் வீட்டிற்கு வெளியே கோலமிட வரும் போது அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாலுசாமியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.