படிக்கட்டில் ஆபத்து பயணம்.. உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!

படிக்கட்டில் ஆபத்து பயணம்.. உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!



Erode Coimbatore Bus door Step Travel

பள்ளி, கல்லூரிகள் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணாக்கர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது தொடர்கதையாகியுள்ளது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கட்டில் பயணம் செய்துள்ளனர்.

erode

இதனைகவனித்த அன்னூர் காவல் ஆய்வாளர், பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ரூ.600 அபராதம் விதித்தனர். மேலும், படிக்கட்டில் பயணம் செய்தவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களை உறுதிமொழி எடுக்கச்சொல்லி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.