பெரியார் பூமியில் ஜாதி வெறியை தூண்டுகிறதா அரசுப்பள்ளி?.. பள்ளிக்கூட கலையரங்கில் ஜாதிய அடையாளம்.!

பெரியார் பூமியில் ஜாதி வெறியை தூண்டுகிறதா அரசுப்பள்ளி?.. பள்ளிக்கூட கலையரங்கில் ஜாதிய அடையாளம்.!



Erode Anthiyur Govt School Caste Name Issue

சமூக நீதியின் அடையாளமாகவும், மூடநம்பிக்கைகளை ஒழித்த நாயகனாகவும் கருதப்படுபவர் ஈ.வெ இராமசாமி என்ற பெரியார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். அதனால் ஈரோடு மாவட்டத்திற்கு பெரியார் மாவட்டம் என்ற அடையாள பெயரும் உண்டு. இத்தகைய மண்ணில் உள்ள அரசுப்பள்ளியில் ஜாதிய பெயர் உபயோகம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது. 

ஈரோடு @ பெரியார் மாவட்டத்தில் உள்ள அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் கலையரங்கம் உள்ளது. 

இந்த கலையரங்கத்தை காட்டூர் கே.பி வேலுசாமி என்பவர் கட்டிக்கொடுத்துள்ளார். அவரின் நினைவாக அமைக்கப்பட்ட கலையரங்கம் என அதில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் சர்ச்சையானது அவரின் சமூக பெயர் தான். அதாவது, காட்டூர் கே.பி வேலுசாமி **யார் நினைவு கலையரங்கம் என சமூக பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

erode

இதனைக்கண்ட இளைஞர் ஒருவர் மேற்கூறிய விபரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், பள்ளியில் ஜாதி உணர்வை ஏற்படுத்தும் கயிறு கட்டக்கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அதனைப்போல எந்த சமூக பெயரும் கல்வி நிறுவனங்களின் பெயரில் இடம்பெறக்கூடாது என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கிராமப்பகுதியில் கூட இல்லை. அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ஈரோடு மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது. சமூக நீதிக்காக பாடுபடும் பலரும் இனியாவது சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்தின் பெயரும் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த கூடாது என்பது நடுநிலையை விரும்பும் சாமானியனின் குரலாக இருக்கிறது.