அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மலைப்பாதையில் ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவத்தில் குழந்தை.. மருத்துவ பணியாளர், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு.!
பர்கூர் மலைப்பாதையில் பிரசவ வலியுடன் அவசர ஊர்தியில் பயணம் செய்த பெண்ணுக்கு, அவசர ஊர்தியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் மலைக்கிராமம் சின்ன செங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவரின் மனைவி சித்ரா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவே, சின்ன செங்குளம் கிராமத்திற்கு சென்ற அவசர ஊர்தி, சித்ராவுடன் ஒரு உறவினரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளது.
இந்நிலையில், பர்கூர் மலைப்பாதையில் பயணம் செய்துகொண்டு இருக்கும் போதே, பெரிய செங்குளம் அருகே சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலறித்துடித்துள்ளார். இதனால் அவசர ஊர்தியை சாலையோரம் ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். பின்னர், மருத்துவ பணியாளர் சிவா என்பவரின் உதவியுடன் சித்ராவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் சுகப்பிரசவத்தில் சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறக்கவே, அவர் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசர ஊர்தி ஓட்டுநர் குமரேசன் மற்றும் மருத்துவ பணியாளர் சிவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.