காதலில் ஏற்பட்ட தோல்வி: பொறியியல் மாணவன் செய்த காரியத்தால் கதறும் குடும்பம்..!

காதலில் ஏற்பட்ட தோல்வி: பொறியியல் மாணவன் செய்த காரியத்தால் கதறும் குடும்பம்..!


Engineering college student commits suicide by drinking poison in love failure

காதல் தோல்வியில் பொறியியல் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள காமாக்காபாளையத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் நந்த அழகன். இவர் சேலத்திற்கு அருகேயுள்ள  மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நந்த அழகனும், அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொறியியல் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த மாணவியின் உறவினர்கள் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதன் காரணமாக, நந்த அழகனை காதலித்து வந்த பொறியியல் மாணவி தந்து வீட்டில் முடிவு செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த நந்த அழகன் அதிர்ச்சி அடைந்ததுடன், தனது காதலிக்கு போன் செய்து நீண்டநேரம் பேசியுள்ளார்.

அவர்களது உரையாடலில், அதிக நேரம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன்னுடைய காதலியை அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது. காதலனின் கோரிக்கையை ஏற்காத மாணவி, அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்த அழகன், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை கண்ட அவரது குடும்பத்தினர், நந்த அழகனை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உள்ளன.ர் தகவலறிந்த தலைவாசல் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து, அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்ததுடன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.