மும்பை இளம் காதலியுடன் ஒரே வீட்டில் உல்லாசமாக இருந்த திருச்சி வாலிபர்.. ஒருநாள் காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மும்பை இளம் காதலியுடன் ஒரே வீட்டில் உல்லாசமாக இருந்த திருச்சி வாலிபர்.. ஒருநாள் காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி


engineer-cheated-mumbai-girl-after-living-together-life

திருமணம் செய்துகொள்வதாக கூறி மும்பை பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு, தற்போது வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார் திருச்சியை சேர்ந்த வாலிபர்.

மும்பையை சேர்ந்தவர் பூஜா. 28 வயதாகும் பூஜா கடந்த 2016ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது தோழியின் மூலம் திருச்சியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான தினேஷ்(33) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் தினேஷ் பூஜாவை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். தனது காதலை தினேஷ் பூஜாவிடம் கூற, பூஜா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது படிப்பு முடிந்து பூஜா கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார். ஆனாலும் பூஜாவை விடாத தினேஷ், அவருக்கு அடிக்கடி போன் செய்து, தன்னை காதலிக்கும்படியும், இல்லையென்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

ஒருகட்டத்தில் மனம்மாறிய பூஜா அவரை ஏற்றுக்கொண்டதோடு, இருவரும் சென்னையில் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழந்து வந்துள்ளனர். இதில் பூஜா ஒருமுறை கற்பமதாகவும், இருவரும் சேர்ந்து அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், ஊருக்கு சென்றுவருவதாகவும் கூறிவிட்டு தினேஷ் சென்னையில் இருந்து கிளம்பி திருச்சி வந்துள்ளார்.

திருச்சி வந்ததில் இருந்து தினேஷ் பூஜாவை தொர்பு கொள்வதை குறைத்துள்ளார். ஒருக்கட்டத்தில் தினேஷ் மற்றும் பூஜா இடையே தொடர்பு முற்றிலும் நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பூஜா இதுகுறித்து விசாரணையில் இறங்கியபோது தினேஷ் வேறொரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தினேஷ் உறவினர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் பார்த்துள்ளார் பூஜா.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து விசாரித்தபோது கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தினேஷுக்கு திருமணம் ஆனதும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தபிறகே அவர் பூஜாவுடன் குடும்பம் நதிவந்தததும் தெரியவந்துள்ளது.

இதனை கேள்விப்பட்டதும் உடைந்துபோன பூஜா இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்திலும், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், அடையாறு துணை ஆணையரிடமும் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.