"காசு கொடுத்து கையேந்த வெக்கிறவங்க; சொந்த கால்ல நிக்க வழி செய்ய மாட்டாங்க" - விவசாயிகள் குமுறல்!

"காசு கொடுத்து கையேந்த வெக்கிறவங்க; சொந்த கால்ல நிக்க வழி செய்ய மாட்டாங்க" - விவசாயிகள் குமுறல்!



election-2019---politics---former-problem---no-solved

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. மக்களவைத் தோ்தல் வருகின்ற 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய காட்சிகள் கொடுக்கும் தேர்தல் அறிக்கைகளை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக விவசாயிகள் தங்களின் விவசாயம் செழிக்க, தொழில் வளம் பெற  எந்த கட்சியாவது நதிநீர் இணைப்பு திட்டத்தை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட மாட்டார்களா என எதிர்பார்த்து வருகின்றனர்.

Election 2019

ஆனால் இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. . நியாய் (NYAY திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்கும் காங்கிரஸ் கட்சி ஏன் அந்த தொகையை ஏழைகளே சம்பாதிக்க கூடிய திட்டங்களை நிறைவேற்ற கூடாது .

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக மாற்றி விவசாயிகளை மேலும் சோம்பேறிகளாய் மாற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நீர் ஆதாரத்தை பெருக்கி விவசாயிகளே தங்களுக்கு தேவையான வருமானத்தை உருவாக்கி கொள்ளும் திட்டங்களை ஏன் உருவாக்க கூடாது. மக்கள் எப்போதுமே அரசாங்கத்தையே நோக்கி கையேந்தி நிற்க வேண்டும் இன்று தான் அனைவருமே எண்ணுகின்றனர். மக்கள் அவர்களுக்கு தேவையான வருமானத்தை அவர்களே பெற்றுக்கொள்ள வேண்டும் என யாரும் ஏன் எண்ணுவதில்லை.

Election 2019

விவசாயிகள்  அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. சிவில் வழக்கின் கீழே நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கூறுவது எவ்வளவு மோசமான செயல். விவசாயிகளை கடன் வாங்க வாங்கி பக்கமே செல்லவிடாமல் பார்த்துக்கொள்வது நல்ல அரசா? அல்லது விவாசிகளை கடன்காரர்களாக மாற்றும் அரசு நல்ல அரசா? இவை அனைத்தயும் பற்றி நாம் சித்திக்க வேண்டிய நேரம் இது.

ஆகா மொத்தம் அனைவருமே நாம் அவர்களை பார்த்து கையேந்தி நிற்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளை பொறுத்தவரை முப்போகம் விவசாயம் செய்ய தேவையான தண்ணீர் மட்டும் கிடைக்க செய்தாலே போதும். அணைத்து வங்கிகளுக்கு விவசாயிகள் கடன் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கிராமத்தில் இருந்து வேலை இல்லை என்று யாரும் போராட மாட்டான். 

Election 2019

இதுபற்றி நன்றாக தெரிந்தும் எந்த அரசியல்வாதிகளும் இதனை சரி செய்ய எண்ணுவதில்லை; காரணம், இங்கு பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே அவர்களால் அரசியல் செய்ய முடியும். ஏழைகள் இருந்தால் மட்டுமே பணம் கொடுத்து ஓட்டு வாங்கு முடியும். என்று மாறப்போகுதோ இந்த நிலைமை? சிந்தியுங்கள் மக்களே, நமக்கு தேவையானதை நாம் தன கேட்டு பெற வேண்டும். இது தான் நாம் கேட்க வேண்டிய நேரம். விழித்துக்கொள்ளுங்கள்!! வாழ்க விவசாயம்!!