பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
மட்டன் 200 சிக்கன் பிரியாணி 180 சாப்பாட்டுக்கும் கெடுபிடி; தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டால் விழிபிதுங்கும் கட்சிகள்.!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வெளியானதையடுத்து நாடு முழுவதும் அனைத்து செயல்பாடுகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதன் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டது.
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று குழுவினரும் (8x3=24) 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் அந்ததந்த பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் 208 பொருட்களுக்கான விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் மட்டன் பிரியாணி ரூ.200 சிக்கன் பிரியாணி ரூ.180 காலை உணவிற்கு ரூ.100 தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.20 மேலும் தொப்பி, பனியன் உள்ளிட்ட பிற பொருட்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.