மக்களுக்கு ஷாக் கொடுத்த முட்டை விலை... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா.?

மக்களுக்கு ஷாக் கொடுத்த முட்டை விலை... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா.?



Egg rate increased today

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1100 கோழிப்பண்ணைகளில், 7 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. அதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்காக வாரம் 3 கோடி முட்டைகள் அனுப்பப்படுகிறது. மீதம் உள்ள 4 கோடி முட்டைகள் தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளில் 52 கிராம் கொண்ட பெரிய முட்டைக்கு வாரம் 3 முறை என்இசிசி விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் வரை ஒரு முட்டை 5.50 காசுகள் விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று என்இசிசி சேர்மன் செல்வராஜ் 5 காசுகள் உயர்த்தி ஒரு முட்டை 5.55 காசாக விலை நிர்ணயம் செய்துள்ளார்.

Egg rate

இதனால் சில்லறை விலையில் ஒரு முட்டையின் விலை 6.50 காசாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே முட்டையின் தேவை அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் முட்டையின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.