தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மறைந்த பாரத பிரதமரின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி!.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் மறைவு, நாட்டிற்கே பேரிழப்பு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் சென்று வாஜ்பாய் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாஜ்பாயின் மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய். அவர் ஒரு இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், மக்களிடத்தில் அன்பாகக் பழகக் கூடியவர், நிர்வாகத் திறமைமிக்கவர். அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசியத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
வாஜ்பாயை பிரிந்துவாழும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.