சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
மு.க.ஸ்டாலினால் எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது.! புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. அனைத்து காட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில், புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்தொண்டைமானை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மு.க.ஸ்டாலின் செல்கிற இடமெல்லாம் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுவினர் வாங்கிய கடனும் ரத்து செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. சட்டமன்றத்திலே அராஜகம் செய்த தி.மு.க.விடம் நாட்டை கையில் கொடுத்தால், நாடு வளம் பெறுமா? மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை தினமும் நடத்தி வருகிறார். எனவே மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது என தெரிவித்தார்.