எல்லோருக்கும் உடனே இ-பாஸ்..! ஆஹா.! சின்ராசு உட்றா வண்டிய..! சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.!

எல்லோருக்கும் உடனே இ-பாஸ்..! ஆஹா.! சின்ராசு உட்றா வண்டிய..! சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.!



Easy E pass heavy traffic in Chennai Vandaloor

இன்று முதல் இ - பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை  அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயம் இ - பாஸ் வாங்க வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் இருந்தது. இ - பாஸ் வழங்கும் அதிகாரிகளின் ஊழல், இ - பாஸ் கிடைப்பதில் தாமதம் இப்படி பல்வேறு சிக்கல்களால் இ - பாஸ் நடைமுறையை நிறுத்தவேண்டும் என மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 17 (இன்று) முதல் இ - பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இ - பாஸ் உடனே வழங்கப்படும் என தமிழக முதலவர் அறிவித்திருந்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்விளைவாக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை இன்றில் இருந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் எல்லை பகுதியான வண்டலூரில் இன்று காலைமுதல் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் கூட்ட நெரிசலால் ஊர்ந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.