தமிழகம்

ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது! மிக கடுமையாக அமல்படுத்தப்படும் ஊரடங்கு!

Summary:

e pass should be renewal

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. 

இந்தநிலையில், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கடந்த முறை இருந்ததை விட இந்த ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். இந்தநிலையில், திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது எனவும், மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல பணியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த அவர் அனுமதி  இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். 

ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரடங்கு நாட்களில் சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்கு சென்று வர அனுமதி கிடையாது. வெளியே இருந்து சென்னைக்கு வருபவர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement