அரசியல் தமிழகம்

துரைமுருகனுக்கு சவால் விட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.! பதிலடி கொடுத்த துரைமுருகன்.!

Summary:

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட துரைமுருகன் தயாராக உள்ளாரா என முதல்வர் எழுப்பிய கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஊழலுக்கு சொந்தக்காரரே திமுக தான். சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார். துரைமுருகன் தயாராக உள்ளாரா? திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்தார்.

இந்தநிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய சொத்து மதிப்பு விபரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்க கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என துரைமுருகன் கூறினார்.


Advertisement