தமிழகம்

நடத்துனரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. போதை ஆசாமி வெறிச்செயல்..!

Summary:

நடத்துனரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. போதை ஆசாமி வெறிச்செயல்..!

பயணச்சீட்டு வாங்குவதில் தகராறு ஏற்பட்டதால், நடத்துனர் ஒருவரை போதை ஆசாமி தாக்கியதில் அவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்து போதை ஆசாமி ஒருவர், விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்தநிலையில், பயணச்சீட்டு வாங்குவதில் நடத்துனருடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குவாதம் சிறிதுநேரத்தில் கைகலப்பாக முற்றியது. 

இதில் கோபமுற்ற போதை ஆசாமி நடத்துனர் பெருமாளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நடத்துனர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், அவரை உடனடியாக மீட்ட சக பயணிகள் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.பின் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, போதை ஆசாமியை கைது செய்து எதற்காக நடத்துநரை தாக்கினாய்? என்ற பல கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement