காதல் மனைவி மீது கல்லை போட்டு கொலை செய்த கணவன் தற்கொலை முயற்சி.!Drunken husband killed wife and try suicide

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பால்ராஜ். இவரது மனைவி நித்ய காமாட்சி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பால்ராஜ்  தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

Pudhukottai

இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு நித்திய காமாட்சி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வீட்டிற்கு வந்த பால்ராஜ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில், மயங்கிய நிலையில் இருந்த நித்திய காமாட்சி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து பால்ராஜ் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

Pudhukottai

இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் பால்ராஜை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நித்திய காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.