எனக்கு மகன் பிறந்திருக்கிறான்.! 3 மாதங்களாக சம்பளம் இல்லை! குடிபோதையில் சாலையை மறித்த வாலிபர்!

எனக்கு மகன் பிறந்திருக்கிறான்.! 3 மாதங்களாக சம்பளம் இல்லை! குடிபோதையில் சாலையை மறித்த வாலிபர்!


drunk man block the road

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதியை அடுத்து உள்ள மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாண்டிசெல்வம் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திருப்பூரில் வேலை இல்லாமல் சொந்த ஊருக்கு வந்துள்ளார் பாண்டிசெல்வம். 

 இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு பாண்டிசெல்வம் மது அருந்திய நிலையில் சாலையில் திடீரென வரும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் பாண்டிசெல்வத்தை தடுத்து வீட்டிற்கு போகுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் பாண்டிசெல்வம் யாரின் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரையும் அடித்து விரட்டியுள்ளார் பாண்டிசெல்வம்.

drung man

 இதனையடுத்து அந்த வழியாக வந்த காவல்துறையினர், பாண்டிசெல்வத்திடம் உனக்கு என்னப்பா பிரச்சனை ஏன் சாலையை மறித்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறாய்? என கேட்டுள்ளனர். அதற்கு பாண்டிசெல்வம் ஊரடங்கு காரணமாக மூன்று மாதமாக எனக்கு வேலை இல்லை, அதனால் வருமானமும் இல்லை, எனவே எனக்கு அரசாங்கம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். 

 அங்கிருந்த போலீசாரும் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் எனக்கூறி பாண்டிசெல்வத்தை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் பாண்டி செல்வம் என்னை யாராவது அடித்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து பாண்டி செல்வத்தின் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். குடிபோதையில் அந்த இளைஞன் செய்த செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.