பீர் பாட்டிலில் குத்தி... கழுத்தறுத்து... டிரம்ஸ் கலைஞர் கொடூர கொலை... கொலையாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு.!
விருதுநகரில் டிரம்ஸ் கலைஞர் கொடூரமாக கழுத்தெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகரில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமலட்சுமி. இவரது முதல் கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இவரது முதல் கணவர் மூலம் பிறந்த மகன் முத்துப்பாண்டி. 17 வயதான இவர் கூலி வேலைகள் செய்து வருவதோடு டிரம்ஸ் கலைஞராகவும் இருந்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு டிரம்ஸ் கலைஞர் அஜித்குமார்.

இந்நிலையில் மதுரையில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித்குமாருக்கு கூலி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு ராமலட்சுமி என் மகன் முத்துப்பாண்டி தான் காரணம் என அவர்கள் வருத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களான விஜய், தனுஷ், செல்வம் ஆகியோர் முத்துப்பாண்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை தனியாக அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
இதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை. நள்ளிரவு நேரத்தில் ராமலட்சுமியின் வீட்டிற்கு வந்த காவல்துறை ஜக்கம்மாள் கோவில் பின்புறம் வாலிபர் ஒருவரின் சடலம் இருப்பதாகவும் அது முத்துப்பாண்டியா என அடையாளம் காட்ட வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த ராம லட்சுமி அங்கு சென்று பார்த்த போது கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது முத்துப்பாண்டி தான் என தெரிய வந்தது. இதனைக் கண்டு அலறி துடித்திருக்கிறார் ராமலட்சுமி. இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் அஜித் குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்கள்தான் முத்துப்பாண்டியை பீர் பாட்டிலை உடைத்து குத்தி அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்க கூடும் என தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.