"ரவுடியோட பையன்., முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு".. போலீசை மிரட்டிய கஞ்சா குடிக்கி..! சொருகிடுவாறாம்..!drug addict threatened police in chennai

டீக்கடையில் உண்டுவிட்டு பணம் தராத வாலிபர், காவல்துறையினரிடம் கூறியதால் கஞ்சா போதையில் காவலர்களை மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள பாண்டி பஜாரில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குவந்த இளைஞர் ஒருவர் டீ, பிஸ்கட் சாப்பிட்டுள்ளார். சிகரெட்டும் வாங்கிய நிலையில், பணம் தராமல் சென்றுள்ளார். இதனால் டீக்கடை உரிமையாளருக்கும், அவருக்கும் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக டீக்கடை உரிமையாளர், பாண்டி பஜார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. 

chennai

இதனையடுத்து தான் வாங்கிய பொருளுக்கு வாலிபர் பணம் தருவதாக கூறியதால் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இளைஞர் இரவு 10 மணியளவில் கஞ்சா போதையில் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து தனது தந்தையுடன் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், திடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடால் கை, கால்களை கிழித்து காவல்துறையினரை மிரட்டியுள்ளார். 

மேலும் "நான் ரவுடியின் மகன், என்னை முடிந்தால் கைது செய்யுங்கள்" சொருகிவிடுவேன் என்று மிரட்டவே, நாளை காலை டீக்கடை உரிமையாளரின் தலையை வெட்டிக்கொண்டு காவல்நிலையத்திற்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.