தமிழகம்

அடக்கொடுமையே... போதை தலைக்கேறினா இப்படியா செய்யுறது , போதை ஆசாமி செய்த அட்டூழியத்தால் ,தெறித்து ஓடிய மக்கள்.!

Summary:

drug addict man bite people

ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மதுபோதையில் மிருகம் போன்று பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு  நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும் நடுவில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடி ஒரு கடையில் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். பின்னர் அவர் திடீரென சிறுவன் மீது பாய்ந்து  கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையாக கடித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை பிடித்து இழுத்து , அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.

      ரத்தம் கொட்டியது

பின்னர்  சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், ஆத்திரம் தாங்காமல் அந்த ஆசாமியை விரட்டிப் பிடித்து அடித்துள்ளனர்.

இதனால் ஓடிய அந்த நபர் மக்கள் தொடர்ந்து துரத்தவும் ,மயக்கம் அடைந்தது போல கீழே விழுந்து நடித்துள்ளார் ,பின்னர் திடீரென எழுந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து சுற்றி நின்றிருந்த கூட்டம் பயத்தில் தெறித்து ஓடியது.

     காலை பிடித்து கடித்தார்

பின்னர் மீண்டும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை பிடித்து காய்,கால்களை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

பின்னர் இவ்வாறு பெரும் ரகளை செய்த அந்த நபர், மதுபானத்தோடு வேறு சில போதை பொருட்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.


Advertisement