ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர்!Driver pregnant to school girl in Cuddalore

கடலூர் மாவட்டம் முதுநகர் செல்லங்ப்பம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். கார் ஓட்டுநரான இவருக்கு ஏற்கனவே திருமணம்  ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் ஓட்டுனராக வேலை செய்யும் இடத்தில் 16 வயது பள்ளி மாணவிகள் பழகி வந்துள்ளார்.

Cuddalore

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் நெருக்கமாக பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதேபோல் பலமுறை சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

Cuddalore

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில் உண்மையை கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக கடலூர் மகளிர் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த போலீசார் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.