காஞ்சிபுரம் அருகே மாயமான ஓட்டுநர் மர்மமான முறையில் மரணம்.. போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் அருகே மாயமான ஓட்டுநர் மர்மமான முறையில் மரணம்.. போலீசார் விசாரணை!


Driver mystery death in kanchipuram

காஞ்சிபுரம் அருகே ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பாண்டவர் பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் ராஜி மகன் நேதாஜி. இவர் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நடிகர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி மாலை வெளியில் செல்வதாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றவர் வீடு திரும்பாமல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

kanchipuram

இதனையடுத்து நேதாஜியின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வெள்ளை கேட் அருகே உள்ள சாலையோரத்தில் நேதாஜி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

kanchipuram

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நேதாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.