மக்களே உஷார்! குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

மக்களே உஷார்! குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!



drinking water association announced strike

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு இயற்றிய சட்டத்தின்படி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர்.

எனவே சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும்  குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென சிவமுத்து என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. எனவே அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறைக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். 

strike

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில்  சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி இன்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் நீதிமன்ற உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை எடுக்கிறோம். மற்றத் தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒருசேரப் பார்க்கக் வேண்டாம். மேலும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.