குடி குடியை கெடுக்கும்.. குடிக்கு அடிமையான கணவரை போட்டு தள்ளிய மனைவி மற்றும் மகன் கைது.!

குடி குடியை கெடுக்கும்.. குடிக்கு அடிமையான கணவரை போட்டு தள்ளிய மனைவி மற்றும் மகன் கைது.!


Drinking spoils drinking.. Wife and son arrested for pushing her husband who is addicted to drinking.

உடுமலை அருகே மடத்துக்குளம் அடுத்த வேடப்பட்டி புதுகாலனியில் வசித்து வந்தவர்கள் தங்கவேல் - வஞ்சிக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு வாசுதேவன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தங்கவேல் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த தங்கவேல் தனது மகன் வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தங்கவேலின் மனைவி வஞ்சிக்கொடி மற்றும் மகன் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்த மண்வெட்டியால் தங்கவேலுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

Murder

இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் தங்கவேலின் மனைவி வஞ்சிக்கொடி மற்றும் மகன் வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.